தமிழ்நாடு

tamil nadu

'8 தோட்டாக்கள்' போல் வித்தியாசமாக இருக்கும் அதர்வாவின் 'குருதி ஆட்டம்'

By

Published : Mar 2, 2020, 11:04 PM IST

சென்னை: 'எட்டு தோட்டாக்கள்' பாணியில் புதுமையான திரைக்கதையுடன் அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் படம் தயாராகி வருவதாக, படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷ் கூறியுள்ளார்.

Atharvaa's Kuruthi aatam movie wrapped up
Atharvaa Kuruthi aatam team

அதர்வா நடித்து வரும் 'குருதி ஆட்டம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்தப் படத்தை ராக் போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் '8 தோட்டாக்கள்' படத்தின் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்குகிறார்.

அதர்வா முரளி, பிரியா பவானி சங்கர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்த மகிழ்ச்சியில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு படக்குழுவினர் தயராகி வருகின்றனர்.

கேக் வெட்டி கொண்டாடும் குருதி ஆட்டம் படக்குழுவினர்.

இது குறித்து இயக்குநர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது:

அதர்வா முரளி, பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் பெரும் மகிழ்ச்சியை தந்தது. அதர்வா முரளி எப்போதும் இயக்குநர்களின் நடிகராகவே இருந்து வருகிறார். எப்படிப்பட்ட நடிகராக இருந்தாலும் என்னைப் போல் புதுமுக இயக்குநர்களுக்கு திரைக்கதையில், இயக்கத்தில், தங்களது அறிவுரையை வழங்குவார்கள்.

ஆனால் அதர்வா முரளி ஒரு சிறு துளி கூட அப்படி நடந்துகொள்ளவில்லை. திரைக்கதையை கேட்டு ஒப்புக்கொண்ட பிறகு, அவர் தன்னை முழுதாக என்னிடம் ஒப்புவித்துவிட்டார். பிரியா பவானி சங்கர் தமிழ் பேசும் நடிகையாக பல உயரங்களுக்கு செல்லக்கூடிய திறமைசாலி.

மூத்த நடிகர்களான ராதாரவி, ராதிகா ஆகியோருடன் பணியாற்ற முதலில் பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடன் வேலை செய்தது ஆசிர்வதிக்கப்பட்ட அனுபவமாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமைகளாக இருந்தும் அனைவருடனும் அவர்கள் வெகு எளிமையாக பழகினார்கள்.

பேபி திவ்யதர்ஷினி இத்திரைப்படம் மூலம் மிகப்பெரிய இடத்தை அடைவார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் படம் '8 தோட்டாக்கள்' போன்று ஒரு புதிய அனுபவத்தை உங்களுக்கு தரும். படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் ட்ரெயலர், இசை விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தை வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

இதையும் படிங்க: பா. இரஞ்சித் படத்திற்காக மாஸ்டரிடம் அடிவாங்கிய ஆர்யா - வைரலாகும் காணொலி

ABOUT THE AUTHOR

...view details