நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான தனுசு ராசி நேயர்களே படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து ஹரீஷ் கல்யாண் பாலிவுட் படமான 'விக்கி டோனார்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். செயற்கை கருத்தரிப்புக்கு விந்து தானம் வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடிகளை காமொடியாக சொல்லியிருந்த 'விக்கி டோனார்' இந்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படம் தமிழில் 'தாரள பிரபு' என்னும் பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். இதில் ஹரீஷ் கல்யாண் நாயகனாகவும், தான்யா ஹோப் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் விவேக் உள்ளிட்ட பிரபலங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.