2019ஆம் ஆண்டுக்கான 67ஆவது தேசிய விருதுகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மார்ச் 22 ஆம் தேதி அறிவித்தது. அப்போது விருதுகள் அறிவிக்கப்படாலும் கரோனா தொற்று அச்சம் காரணமாக விருது வழங்கு விழா தள்ளிவைக்கப்பட்டது.
திரைத் துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவிக்கிறது.
இந்நிலையில், இன்று (அக்.25) டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில், தேசிய விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில், ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தானு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதுகளை வாங்கினர்.
அதன்படி 2019ஆம் ஆண்டுக்கான விருது பெற்றோர் விவரம் பின்வருமாறு:
- சிறந்த திரைப்படம் - இயக்குநர் வெற்றிமாறனின் 'அசுரன்'
- சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்)
- சிறப்பு ஜூரி விருது - இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு'
- சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)
- சிறந்த இசையமைப்பாளர் - டி. இமான் (விஸ்வாசம்)
- சிறந்த ஒலிப்பதிவாளர் - ரசூல் பூக்குட்டி ( ஒத்த செருப்பு)
- குழந்தை நட்சத்திரம் - நாக விஷால் (கேடி (எ) கருப்புதுரை)
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கலைச்சேவையை பாராட்டி அவருக்கு 'தாதா சாகேப் பால்கே விருது' வழங்கப்பட்டது. 'மணிகர்னிகா', 'பங்கா' படங்களில் நடித்தற்காக கங்கனாவிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நான்காவது முறையாக வென்றுள்ளார்.
தேசிய விருது வாங்கிய மேலும் சில திரைப்படங்கள் குறித்தான பட்டியலை இங்கே பார்போம்.
- மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கிய 'மரக்காயர் அரபிகடலின்டே சிம்ஹம்' (மலையாளம்) சிறந்த திரைப்டத்திற்கான விருதை பெற்றுள்ளது.
- அன்பென் நடிப்பில் வெளியான 'ஹெலன்' (மலையாளம்) இந்திரா காந்தி விருதை பெற்றுள்ளது.
- மகேஷ்பாபு நடிப்பில் வெளியான 'மகரிஷி' (தெலுங்கு) சிறந்த ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் விருதை வென்றுள்ளது.
- மறைந்த சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான chhichhore சிறந்த திரைப்படம் (இந்தி) விருதை வென்றுள்ளது.
- சிறந்த நடிகருக்கான விருதுதை மனோஜ் பாஜ்பாய் 'போன்ஸ்லே' (Bhonsle - Hindi) படத்திற்காக பெற்றுள்ளார்.
- கிரீஸ் கங்காதரன் 'ஜல்லிகட்டு' (மலையாளம்) படத்திற்கு ஒளிப்பதிவுக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்றுள்ளார்.
- நானி நடிப்பில் தெலுங்கில் உருவான 'ஜெர்ஸி' திரைப்படதின் படத்தொகுப்பாக நவீன் நூளி (Navin Nooli) சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதை வென்றுள்ளார். அதே போல் சிறந்த திரைப்படம் (தெலுங்கு) விருதையும் வென்றது.
- சிறந்த ஆடை வடிவமைப்பு விருதை மோகன்லாலின் 'மரக்கார் அரபிகடலின்டே சிம்ஹம்' வென்றுள்ளது.
- சிறந்த விஎப்எக்ஸ் (VFX) விருதை மோகன்லாலின் 'மரக்காயர் அரபிகடலின்டே சிம்ஹ'ம் வென்றுள்ளது.
- அன்பென் நடிப்பில் வெளியான 'ஹெலன்' திரைப்படம் சிறந்த மேக்-அப் விருதை வென்றது
- மகேஷ்பாபு நடிப்பில் வெளியான 'மகரிஷி' படத்திற்கு சிறந்த நடன இயக்குநர் விருதை ராஜூ சுந்தரம் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய விருது பெற்ற நடிகருக்கு கரோனா தொற்று!