தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கல்ட் கிளாசிக்: 53 yrs of தில்லானா மோகனாம்பாள் - தில்லானா மோகனாம்பாள்

'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படம் வெளியாகி இன்றோடு (ஜூலை 27) 53 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

53 yrs of Thillana mohanambal
53 yrs of Thillana mohanambal

By

Published : Jul 27, 2021, 3:20 PM IST

சிவாஜி ரசிகர்களால் மறக்க முடியாத படங்களில் ஒன்று ‘தில்லானா மோகனாம்பாள்’. நாதஸ்வர கலைஞராக சிவாஜி அசத்தியிருப்பார். ஏ.பி. நாகராஜன் இயக்கிய இப்படத்தில் சிவாஜி, நாட்டிய போரொளி பத்மினி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மனோரமா, நம்பியார், பாலாஜி, செந்தாமரை, டி.எஸ். பாலையா என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தது. மனோரமாவுக்கு இந்தப் படம் நற்பெயரை பெற்றுத் தந்தது. அவரது நடிப்பு இதில் வெகுவாக பாராட்டப்பட்டது.

53 yrs of தில்லானா மோகனாம்பாள்

கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ‘தில்லானா மோகனாம்பாள்’ எனும் நாவலைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. கேவி மகாதேவன் இசையில் ‘மறைந்திருந்தே பார்க்கும்’, ‘நலந்தானா நலந்தானா’ ஆகிய பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தது. இன்றளவும் இந்தப் பாடல்களுக்கு மவுசு இருக்கிறது.

53 yrs of தில்லானா மோகனாம்பாள்

இந்தப் படத்தின் மீது திரைப்பட விமர்சகர்கள் சிலருக்கு விமர்சனம் இருக்கிறது. உடை அலங்காரம் தமிழர் பண்பாடு சார்ந்ததாக இல்லை என்ற விமர்சனத்தை முன் வைக்கின்றனர். எனினும் பெருவாரியான மக்களால் மிகவும் ரசிகப்பட்டு தமிழின் கல்ட் திரைப்படமாக விளங்குகிறது.

இதையும் படிங்க:சின்னக்குயில் சித்ராவுக்கு பிறந்தநாள்

ABOUT THE AUTHOR

...view details