‘காதல் தேசம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தபு. அதன்பிறகு ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ஸ்நேகிதி’ என சில தமிழ் படங்களில் தபு நடித்திருக்கிறார். ஆனால் பாலிவுட், டோலிவுட்டில் அவர் மிக முக்கியமான நடிகை. இந்திய சினிமா பெருமை கொள்ளத்தக்க நடிகை தபு என்று சொன்னால் அது மிகையாகாது.
‘சாந்தினி பார்’, ‘மாச்சிஸ்’ ஆகிய படங்களில் நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
‘காதலில்லாத முத்தம் பெறுவதைவிட உலகில் வேறொன்றும் பெரிய தண்டனையில்லை’ என ஒரு பாலியல் தொழிலாளி கூறுவதாக கவிஞர் சதீஷ் பிரபு தனது ‘சாக்கி’ கவிதை தொகுப்பில் எழுதியிருப்பார். ஒரு பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில்தான் ‘சாந்தினி பார்’ படத்தில் தபு நடித்திருந்தார். முகபாவனைகள் மூலம் பாலியல் தொழிலாளிகளின் வலியை நமக்குள் கடத்திவிடுவார்.
இப்படி ஒரு அருமையான கதாநாயகியை தமிழ் சினிமா அதிகம் பயன்படுத்திக் கொள்ளாதது காலக்கொடுமை. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் தபு, க்ளைமாக்ஸில் அஜித்துடன் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என பார்வையாளர்களை ஏங்கவைக்கும் அளவு நடித்திருப்பார்.
விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி