தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஒரு காட்சிக்கு மட்டும் 40 கோடி செலவா!  மிரட்டுகிறார் ஷங்கர். - நெடுமுடி வேனு

ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் 20ஆண்டுகளுக்குப் பின் 'இந்தியன்-2' வரவிருக்கிறது. தற்போது போப்பாலில் 2000 ஜூனியர் ஆர்டிஸ்டுகளுடன் பிரம்மாண்ட சண்டைக்காட்சி படம்பிடிக்கப்படவுள்ளது. இதற்காக 40 கோடி ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Indian 2

By

Published : Oct 23, 2019, 11:12 PM IST

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளிவந்து ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் 'இந்தியன்'.

தற்போது 20ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்த ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணி 'இந்தியன்-2' எனும் கமர்ஷியல் பேக்கேஜுடன் ரசிகர்களுக்கு விருந்து படைக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. இதற்காக சமீபத்தில் போப்பாலில் உள்ள ராஜ போஜ் சேது என்னுமிடத்தில் 90 வயது முதியவராக வேடமிட்டிருந்த கமலின் புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளத்தில் பரவிவருகிறது.

ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் இப்படத்திற்கு, 2000 ஜூனியர் ஆர்டிஸ்டுகளுடன் கூடிய பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்று போப்பாலில் படம்பிடிக்கப் படவுள்ளது. இந்தக் காட்சிக்காக மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

போப்பாலில் படப்பிடிப்பு முடிந்தபின், யூரோப், தைவான் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடக்குமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் சேனாபதியாக வரும் கமலுடன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், வித்யுத் ஜம்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு போன்ற நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிரூத் இசையில், ரவி வர்மன் ஒளிப்பதிவை கவனித்துக் கொள்கிறார்.

இதையும் படிங்க: இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? 'பிகில்' படத்துக்கு அடுத்த சோதனை!

ABOUT THE AUTHOR

...view details