புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா'. தமிழில் வெளியான க்ரைம் த்ரில்லர் படங்களின் வரிசையில் வித்தியாசமான கதை சொல்லளின் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
விக்ரமாதித்தன் வேதாளம் கதை போல இதன் கதையமைப்பு இருந்தது. விக்ரம் எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் மாதவனும், வேதா எனும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் மிரட்டியிருந்தனர். காவல்துறையினரின் துப்பாக்கி கலாசாரம் குறித்து இப்படத்தில் தெளிவாக காட்டப்பட்டிருந்தது.
ஒரு கத சொல்ட்டுமா சார்னு விஜய் சேதுபதி சொல்லும் கதையின் சஸ்பென்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. விஜய் சேதுபதிக்கு ‘வேதா’ கதாபாத்திரம் ஒரு முத்திரை பதித்த கதாபாத்திரமானது. தமிழ் சினிமா கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் ‘வேதா’ கதாபாத்திரம் நிலைத்து நிற்கும்.
‘விக்ரம் வேதா’ படத்தை பற்றி பேசுகையில் தவிர்கக முடியாதது சாம் சி.எஸ். இந்தப் படத்தின் விளம்பரத்தில் பாடல்களுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. யாஞ்சி யாஞ்சி பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் படத்தின் தீம் மியூசிக் பலரது ரிங்டோனாக இருந்தது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை ‘விக்ரம் வேதா’ ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:வயசானாலும் உங்க அழகும் இளமையும் உங்கள விட்டு போகலா:நதியாவை புகழந்து தள்ளும் நெட்டிசன்கள்