தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காமசூத்ரா பட நடிகை திடீர் மரணம் - saira khan death

3D காமசூத்ரா படத்தில் நடித்து பிரபலமான நடிகை சாயிரா கான் மாரடைப்பால் மரணமடைந்தார்.

நடிகை சாயிரா கான்

By

Published : Apr 24, 2019, 10:00 AM IST

2013ஆம் ஆண்டு 3D தொழில்நுட்பத்தில் வெளியான திரைப்படம் காமசூத்ரா. சுரேஷ் பவுல் இயக்கிய இப்படத்தில் சாயிரா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், சாயிரா கான் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சாயிரா இறப்பு குறித்துப் பேசிய இயக்குநர் சுரேஷ் பவுல், 'சாயிரா கான் மிகத் திறமையான நடிகை. அவர் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் இறந்த செய்தியை யாரும் வெளியிடாமல் இருந்ததை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. மிகத் திறமையான நடிகையாக இருந்தும் சினிமா உலகில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இஸ்லாமியரான சாயிராவை இந்தப்படத்தில் நடிக்க வைக்க சவாலாக இருந்தது. நீண்ட நாள்கள் காத்திருந்தேன், அவரைப் பின்தொடர்ந்து புரிய வைத்தேன். அதன்பிறகே 3D காமசூத்ரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால் இந்தப்படத்தில் அவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்' என சுரேஷ் பவுல் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details