தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தன்னைத்தானே செதுக்கியவன் இவன்: 29 years of தல அஜித் - அஜித் குமார்

அஜித் எவ்வளவு வெற்றியைச் சந்தித்திருக்கிறாரோ அதே அளவு தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். ஒருகட்டத்தில் அஜித் கொடுத்த தோல்விகளை வைத்து இனி அவரது காலம் அவ்வளவுதான் என்று பரவலாகப் பேசப்பட்டது.

ajith
ajith

By

Published : Aug 3, 2021, 11:21 AM IST

Updated : Aug 3, 2021, 11:52 AM IST

கோடிக்கணக்கான ரசிகர்கள், 50-க்கும் மேற்பட்ட படங்கள், கோடிகளில் சம்பளம் எனத் தற்போது உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித். திரைத் துறையில் யாருடைய உதவியுமின்றி நுழைந்து தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அஜித்தின் ஆரம்பகாலம் அடிகளுக்கு உட்பட்டது.

எத்தனையோ அடிகளை வாங்கிய அஜித் அமராவதி படம் மூலம் அறிமுகமானார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து திரைத் துறையில் நடித்துக்கொண்டிருந்த அஜித் ஆசை படத்தில் நடித்தார்.

வசந்தின் கதையும், தேவாவின் இசையும், அஜித்தின் நடிப்பும் ஆசையைப் பெரிய வெற்றிபெற வைக்க கோலிவுட்டின் ஆசை நாயகனானார் அஜித். திரைத் துறையில் தனக்கான சாம்ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டிருந்த அஜித்திற்குக் காதல் கோட்டை கிடைத்தது. காதல் கோட்டை மூலம் தயாரிப்பாளர்களின் வாண்டட் கதாநாயகனாக மாறினார் அஜித்.

காதல் கோட்டை மூலம் கோலிவுட்டின் மன்னர்களில் ஒருவராக அஜித் மாறினார். அந்தச் சமயத்தில் வாலி திரைப்படம் மூலம் தனக்குள் இருந்த வில்லனையும் வெளியே கொண்டுவந்தார். அதனையடுத்து சிவாஜி - எம்ஜிஆர், ரஜினி - கமல் என்று பேசி அவர்களைப் பந்தய குதிரையாக மாற்றுவதுபோல் விஜய் - அஜித் என்று பேசி அஜித் பந்தய குதிரை வரிசையில் இணைக்கப்பட்டார்.

அஜித் எவ்வளவு வெற்றியைச் சந்தித்திருக்கிறாரோ அதே அளவு தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். ஒருகட்டத்தில் அஜித் கொடுத்த தோல்விகளை வைத்து இனி அவரது காலம் அவ்வளவுதான் என்று பரவலாகப் பேசப்பட்டது. அதற்கேற்றார்போல் அவரும் கார் பந்தயம், பைக் பந்தயம் என தனது கவனத்தைச் செலுத்தினார்.

இருந்தாலும் ரசிகர்கள் அஜித் மீது வைத்திருந்த அன்பு குறையாததால் மீண்டும் சினிமாவில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

2007ஆம் ஆண்டு பில்லா திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கண்ட அஜித் தொடர்ந்து தற்போது இயங்கிக்கொண்டிருக்கிறார். தன் கடமையை அமைதியாய் செய்வது, தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பது எனத் தற்போதைய இளைய தலைமுறை கதாநாயகர்கள் பலருக்கு ரோல்மாடலாகவும் அஜித் இருக்கிறார்.

இந்நிலையில், நேற்று வலிமை படத்தின் பாடல் வெளியான சூழலில், அஜித் திரைத் துறைக்கு வந்து இன்று 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் 30 years of தல அஜித் எனக் கொண்டாடிவருகின்றனர்.

Last Updated : Aug 3, 2021, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details