தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காஞ்சனா-3 உட்பட மூன்று படங்கள் நாளை ரிலீஸ் - காஞ்சனா-3

ராகவா லாரன்ஸின் காஞ்சனா-3, ராஜூ முருகன் எழுத்தில் மெஹந்தி சர்க்கஸ், நடிகர் விவேக்கின் வெள்ளைப்பூக்கள் என மூன்று படங்கள் நாளை வெளியாகின்றன.

மெகந்தி சர்க்கஸ்

By

Published : Apr 17, 2019, 5:11 PM IST

மெஹந்தி சர்க்கஸ்:
குக்கூ, ஜோக்கர் படங்களின் இயக்குநர் ராஜூ முருகன் கதை, வசனத்தில் வெளியாகும் படம் மெஹந்தி சர்க்கஸ். இப்படத்தை ராஜூ முருகனின் அண்ணன் சரவணன் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தை ஞானவேல்ராஜா, தனது ஸ்டுடியோ கீரின் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தற்போது அழிந்து வருகிற சர்க்கஸ் தொழிலை பின்னணியில் எளிமையான காதல் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையே படத்தின் போஸ்டர்களும், பாடல்களும் எடுத்து சொல்லும் விதத்தில் உள்ளன. ராஜூ முருகன் கதை என்பதால், படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காஞ்சனா3

காஞ்சனா-3:
ராகவா லாரன்ஸ்க்கு காஞ்சனா சீரிஸ் தொடர்ந்து வெற்றியையும், பாக்ஸ் ஆபிஸில் பெரிய கலெக்சனையும் அள்ளி வருகின்றன. தற்போது காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தை எடுத்துள்ளார் லாரன்ஸ். இப்படத்தில் ஓவியா, வேதிகா ஆகியோர் புதியதாக இணைந்துள்ளனர். இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோரின் காமெடி கூட்டணி, இந்த படத்திலும் தொடர்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. காஞ்சனா-2 படம் கடந்தாண்டு மே மாதம் வெளியாகி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. படத்தை வாங்கி வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நல்ல கலெக்சனை கொடுத்தது.

வெள்ளை பூக்கள்

வெள்ளை பூக்கள்:
மீண்டும் நாயனாக விவேக் நடிக்கும் படம் வெள்ளை பூக்கள். அமெரிக்காவில் நடக்கும் சம்பவங்களை கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிந்துள்ளனர். படத்தில் விவேக் உடன் சார்லி, பூஜா தேவரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து படம் பேசியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தை விவேக் இளங்கோவன் எனும் புதியவர் இயக்கியுள்ளார். விவேக் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டுக்கு எந்த படங்களும் வெளியாகவில்லை. ஆனால், நாளை மூன்று முக்கிய படங்கள் வெளியாகின்றன. இதில் காஞ்சனா-3 படம் அதிக கலெக்சனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details