தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அக்னி சிறகுகள்- விஜய் ஆண்டனி பிறந்தநாளுக்கு பரிசு கொடுத்த படக்குழு - விஜய் ஆண்டனி பிறந்தநாள்

'அக்னி சிறகுகள்' படத்தில் விஜய் ஆண்டனியின் இரண்டாவது லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

By

Published : Jul 24, 2021, 7:09 PM IST

'மூடர் கூடம்', 'அலாவுதீனின் அற்புத கேமரா’ ஆகிய படத்திற்குப் பிறகு நவீன் இயக்கியுள்ள திரைப்படம் 'அக்னி சிறகுகள்'. அருண் விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ளார்.

இதில் அக்‌ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், தலைவாசல் விஜய், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, சென்றாயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று (ஜூலை 24) விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு 'அக்னி சிறகுகள்' படத்தில் அவரது இரண்டாவது லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், மிகவும் கோபமாக விஜய் ஆண்டனி சிகரெட் பிடிப்பது போல் உள்ளது. அப்போஸ்டர் விஜய் ஆண்டனி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க:உலகத்திலேயே ஆபத்தான 'எனிமி' எல்லாம் தெரிந்த நண்பன்: வெளியான டீசர்!

ABOUT THE AUTHOR

...view details