11ஆவது சர்வதேச குயர் திரைப்பட விழா காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 42 நாடுகளைச் சேர்ந்த 157 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இது தெற்காசியாவின் மிகப்பெரிய LGBTQIA+ திரைப்பட விழா. இந்த ஆண்டின் முதல் இந்திய திரைப்பட விழா இதுவாகும். பெலரஸ், ஈரான், ஐஸ்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ள இவ்விழாவில் 30 இந்தியத் திரைப்படங்கள் இடம்பெறவுள்ளன.
KASHISH 2020: மும்பை சர்வதேச குயர் திரைப்பட விழா
கரோனா ஊரடங்கு வேளையில் 11ஆவது சர்வதேச குயர் திரைப்பட விழா காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 42 நாடுகளைச் சேர்ந்த 157 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
2020 Mumbai Queer Film festival to go virtual
இதுகுறித்து விழாவின் இயக்குநர் ஸ்ரீதர் ரங்கயான், இந்த விழாவை நடத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மும்பை மட்டுமில்லாது உலகெங்கிலும் இருந்து அனுப்பப்பட்ட பல்வேறு திரைப்படங்கள் இதில் திரையிடப்படவுள்ளன. இதனால் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.