கரோனா தொற்று காரணமாக பிரபல திரைப்பட விழாவான கேன்ஸ் விருது விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலக சினிமாக்களில் ஆஸ்கர் விருது விழாவுக்குப் பின் அதிகம் கவனிக்கப்படும் விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் சிட்டியில் நடைபெறும் கேன்ஸ் விருது வழங்கும் விழா. இதில் விருது வாங்கும் படங்கள் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் தரமான படைப்பாக இருக்கும் என நம்பிக்கை உண்டு. இந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விருது விழா மே 12 முதல் மே 28 வரை நடைபெற இருந்தது.
இதனையடுத்து 73ஆவது கேன்ஸ் திரைப்படவிழா, உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக விழா குழு அறிவித்துள்ளது.