ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ’2.0’. லைகா நிறுவனம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்தது. 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இப்படம் எதிர்பார்த்த வசூல் சாதனை புரியவில்லை. படம் வெளியான ஒருவாரமாக தியேட்டர்கள் வெறிச்சோடின. இந்தியில் மட்டும் வசூல் சாதனை புரிந்தது. மேஜிக் ஜாலங்கள் நிறைந்த காட்சிகள் இடம்பெற்றாலும் கதையில் தொய்வு ஏற்பட்டு ரசிகர்களுக்கு அலுப்பை தந்தது.
சீனாவில் வசூல் சாதனை புரியுமா 2.0? - 2.o movie
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ’2.0’ திரைப்படம் சீனாவில் திட்டமிட்டபடி செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தப்படம் சீனாவில் வெளியிடப்பட்டால் மட்டுமே லைகா நிறுவனம் போட்ட காசை எடுக்க முடியும் என்று படக்குழுவினர் திட்டமிட்டனர். இதனால், மே மாதம் 2.0 படத்தை வெளியிட திட்டமிட்டு பின்னர், ஜூலை மாதம் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், தி லயன் கிங் படம் வெளியானதால் 2.0 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், சீனாவில் படத்தை வெளியிடுவதை லைகா நிறுவனம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த சூழ்நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி 2.0 வெளியிட உள்ளனராம். 47 ஆயிரம் கோடி திரைகளில் வெளியாகும் இப்படம் பிரமாண்ட வசூல் சாதனை புரியும் என்ற ஆவலோடு படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.