மூப்பனார் குடும்பம் தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற விவசாயக் குடும்பமாக இருந்தது. காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த அவர், அரசியல் பொது வாழ்க்கையில், தூய்மை, நேர்மை வளமான தமிழ்நாட்டை வலிமைப்படுத்த மற்ற தலைவர்களின் செயல்பாடுகளில் இருந்து மாறுபட்டு காணப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த மூப்பனார் மறைந்து இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
’மூப்பனார் நேர்மையாக அரசியல் செய்தார்’ - நடிகர் சத்யராஜ் புகழாரம் - 19ஆவது ஜிகே மூப்பனார் நினைவு நாள்
ஜி.கே.மூப்பனார் நேர்மையாக அரசியல் செய்தவர் என நடிகர் சத்யராஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசியலில் தனித் தடம் பதித்த அவரது 19ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (ஆகஸ்ட் 30) நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று மூப்பனாருடைய நினைவு நாள். இவர் நாம் பெரிதும் மதிக்கும், போற்றும் காமராஜரைப் போலவே எளிமையானவர், அன்பானவர், பண்பானவர், மிக முக்கியமாக நேர்மையாக அரசியல் செய்தவர். அவருடைய 19ஆவது நினைவு நாளில் அவரை நினைவுகூருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என நடிகர் சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'அரிசி கொடுத்த மூப்பனார்; நன்றி மறந்த கே.எஸ். அழகிரி' - கராத்தே தியாகராஜன் சாடல்