தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது! - சர்வதேச திரைப்பட விழா

சென்னையில் 18ஆவது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கியது.

Chennai
Chennai

By

Published : Feb 19, 2021, 7:37 PM IST

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். கரோனா காரணமாக கடந்த டிசம்பரில் நடைபெற வேண்டிய திரைப்பட விழா தொடங்கியது. சினிமா ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த விழாவை இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் பிவிஆர் உடன் இணைந்து நடத்துகிறது. உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உள்பட) 92 திரைப்படங்கள் திரைப்பட விழாவில் பங்குபெற உள்ளன.

இதுகுறித்து இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச்செயலாளர் தங்கராஜ் கூறியதாவது, "18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 18 தொடங்கி பிப்ரவரி 25 அன்று பிவிஆர் மல்டி பிளக்ஸின் சத்யம் திரையில் நிறைவு விழா நடைபெறும். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களான ஆப்பிள்ஸ், ககுவூ வாடிஸ், ஆய்டா?, லிசன், தி ஸ்லீப் வாக்கர்ஸ், ஆக்னெஸ் ஜாய், ரன்னிங் அகைன்ஸ்ட் தி விண்ட் மற்றும் ரன்னிங் டூ தி ஸ்கை உள்ளிட்ட திரைப்படங்கள் 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும்.
கேன்ஸ் திரைப்பட விழா, பெர்லின் திரைப்பட விழா, ஈரான் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா, பூசான் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன. நாடுகள் வரிசையில், ஈரான் 11, பிரான்ஸ் 6, ஹங்கேரி 4, சிலி 2, இந்திய பனோரமாவில் திரையிடப்பட்ட படங்களும், தமிழ்த் திரைப்படங்களும் திரையிடப்படும்.

தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டியில் 13 திரைப்படங்கள் கலந்துகொள்கின்றன. இந்தப் போட்டிக்காக நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதில், 'லேபர்', 'கல்தா', 'சூரரைப்போற்று', 'பொன்மகள் வந்தாள்', 'மழையில் நனைகிறேன்', 'மை நேம் இஸ் ஆனந்தன்', 'பாஸ்வேர்ட்', 'காட் ஃபாதர்', 'தி மஸ்கிடோ பிலாசபி', 'சம் டே', 'காளிதாஸ்', 'க/பெ ரணசிங்கம்' மற்றும் 'கன்னி மாடம்' ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அங்கோலா, எதியோப்பியா, கிர்கிஸ்தான், லெபனான், மோனோகோ, ருவாண்டா, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து திரைப்படங்கள் கலந்துகொள்கின்றன" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details