2007ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் ‘Chak De India’. ஷிமித் அமின் இயக்கிய இப்படம் ஷாருக்கான் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக மாறியது. ரொமான்டிக் ஹீரோ என்ற பிம்பத்தை கொண்டிருந்த ஷாருக்கான், சாதிக்கத் துடிக்கும் ஹாக்கி பயிற்சியாளராக இதில் நடித்திருப்பார்.
ஷாருக்கானா இது என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு, கபீர்கான் எனும் ஹாக்கி பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் ஒன்றிப்போய் நடித்திருப்பார். பெண்கள் ஹாக்கியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியபோது பலரும் இந்தப் படத்தை உதாரணம் காட்டி பேசியிருந்தார்கள்.