தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் பிரபுதேவா - வடிவேலு கூட்டணி! - நடன இயக்குநர் பிரபுதேவா

பிரபல நடன இயக்குநர் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

பிரபுதேவா - வடிவேலு கூட்டணி
பிரபுதேவா - வடிவேலு கூட்டணி

By

Published : Feb 10, 2022, 3:41 PM IST

நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்தப் படத்தை வடிவேலுவின் நண்பரும், இயக்குநமான சுராஜ் இயக்கிவருகிறார்.

இதன் படப்பிடிப்பு தொடங்கி. விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பெரிய பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தில் ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதையொட்டி பாடல் பதிவிற்காக வடிவேலு, படக்குழுவினர் சமீபத்தில் லண்டன் சென்று திரும்பினர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடல் ஒன்று பிரமாண்டமாக படமாக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா கமிட் ஆகி உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஒரு பாடலுக்கு நடனம் அமைக்க பிரபுதேவாவிற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் உலவுகிறது.

ஆரம்பக்காலத்தில் பிரபுதேவா - வடிவேலு கூட்டணியில் உருவான பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, காதலன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பைப் பெற்று பாடலிலும், பிரபுதேவா - வடிவேலு இணைந்த நகைச்சுவையிலும் ரசிகர்களிடம் பெரும் ஆதரவை தனக்கென்று இன்று வரையில் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தப் படத்தில் வரும் பேட்ட ராப் பாடல் பட்டித்தொட்டிகளில் உள்ளவர்களுக்கு எத்தனையோ மனக்கசப்புகள், கவலைகள் இருப்பினும் இந்தப் பாடலைக் கேட்டு தங்களையும் அறியாமல் தாளம் போட்டுக்கொண்டு ஆட வைத்துவிடும். காதல் படத்தில் என்டர்டெய்ன்மென்ட்டுக்காக வைக்கப்பட்ட பாடலிற்கே இருவரும் அசத்தியிருப்பார்கள்.

தற்போது படப்பிடிப்பில் உள்ள இந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இவர்களின் கூட்டணியில் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: தேவராட்டம் கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம்?

ABOUT THE AUTHOR

...view details