தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமெரிக்க மென் பொறியாளர்கள் தயாரித்த "வெள்ளைப் பூக்கள்" - team

சென்னை: அமெரிக்க மென் பொறியாளர்கள் தயாரித்துள்ள வெள்ளைப் பூக்கள் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

வெள்ளை பூக்கள் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

By

Published : Apr 9, 2019, 9:06 AM IST

நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்திருக்கும் வெள்ளைப்பூக்கள் படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த மென் பொறியாளர்கள் குழு தயாரித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் விவேக் இளங்கோவன் பேசுகையில், உத்யோக ரீதியாக மென்பொருள் பொறியாளராக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், நாடகத்துறையில் அனுபவமிக்கவராக, ஒரு இயக்குனராக, ஒரு எழுத்தாளராக பதிவு செய்வதில் தனக்கு ஆர்வம் என்று கூறினார். இண்டஸ் குழுமத்தின் பல்வேறு நாடக மற்றும் திரைப்பட தயாரிப்புகளில் இயக்குநர் குழுவில் பங்குபெற்று எடுக்கப்பட்ட ‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ ஆகிய குறும்படங்கள் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்று இருப்பதாகவும் இயக்குநர் விவேக் இளங்கோவன் கூறினார்

இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் இராம்கோபால் கிருஷ்ணராஜூ கூறுகையில், மென்பொருள் பொறியாளராக அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், பாரம்பரிய இசையில் தேர்ச்சி பெற்றதால், தமிழக அரசால் ‘கலை இளமணி’ விருது தனக்கு வழங்கப்பட்டதாகவும் பல்வேறு இண்டஸ் குழும நாடகங்களுக்கும், குறும்படங்களுக்கும் இசையமைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

வெள்ளைப் பூக்கள் படத்தில் சார்லி மற்றும் ‘மயக்கமென்ன’ ‘இறைவி’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகை பூஜா தேவரியா நடித்துள்ளார்.

‘வாயை மூடி பேசவும்’ மற்றும் ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படங்களில் நடித்த நடிகர் தேவ் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை, தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட ஹாலிவுட் நடிகையான பெய்ஜ் ஹெண்டர்சன் நடித்துள்ளார். ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்திற்காக தேசிய விருதைப் பெற்ற பிரவீன் படத்தொகுப்பில் இப்படம் வெளிவரவிருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details