எம்.எம். சந்திர மௌலி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே, சதீஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது '100% காதல்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், நடிகை ஜெயசித்ரா, ரேகா, ஷாலினி பாண்டே, ஜி.வி. பிரகாஷ், அப்புகுட்டி உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
'100% காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழா- பிரபலங்கள் பங்கேற்பு - shalini pandey
சென்னை: எம்.எம். சந்திர மௌலி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள '100% காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய ஜிவி பிரகாஷ், "100% காதல் படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய என்னை அணுகினார்கள். இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே ஒரே குடும்பமாக பணியாற்றினோம். இது இளைஞர்களுக்கான படமாக மட்டுமல்லாமல் பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளோம். இது மிகப்பெரிய வெற்றிபெறும் என்று நம்புகிறேன்" என்றார்.
நடிகை ஷாலினி பாண்டே பேசுகையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று மிகப்பெரிய பயணமாக இருந்தது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே ஒரு குடும்பமாக இருந்தோம். இது ஒரு அற்புதமான உணர்வாக இருந்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு அளித்த இயக்குநருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.