தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு; பணியாளர் செய்த துரோகம் - stolen from actress Nikki Galrani house

சென்னையில் உள்ள தனது வீட்டில் பணியாளர் தனுஷ் என்பவர் 1.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடிச் சென்றதாக நடிகை நிக்கி கல்ராணி புகார் அளித்துள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணி
நடிகை நிக்கி கல்ராணி

By

Published : Jan 19, 2022, 3:24 AM IST

சென்னை:நடிகை நிக்கி கல்ராணிமொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், டார்லிங் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். சமீபத்தில் நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் ராஜவம்சம் படத்தில் நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இவருக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது.

இந்த வீட்டில் தன்னுடைய பணியாளர் தனுஷ் என்பவர் ஜனவரி 11ஆம் தேதி 1.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடிச் சென்றதாக நிக்கி கல்ராணி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஜனவரி 13ஆம் தேதி விசிக பிரமுகர் செல்லதுரை என்பவர் அண்ணா சாலை காவல் நிலையத்தில் நடிகை நிக்கி கல்ராணி மீது புகார் ஒன்றை அளித்தார்.

அதில், திருடிய குற்றத்திற்காக தனுஷ் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் நிக்கி கல்ராணி மீது நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறை விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சயின் அடிப்படையில் முதலில் தனுஷ் குற்றவாளி என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர் திருப்பூரில் பதுங்கியிருப்பது தெரியவந்து, கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து நிக்கி கல்ராணியின் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் புகாரை நிக்கி கல்ராணி திருப்பப்பெற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:நான் தண்ணி அடித்தால் மிக க்யூட்டாக இருக்கும் - நிக்கி கல்ராணி

ABOUT THE AUTHOR

...view details