80களில் தொடங்கி இன்று வரை பாலிவுட்டில் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் அனில் கபூர். 80களின் ஆரம்பத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலம் தொடங்கி , தன் மனைவி சுனிதாவைக் காதலித்து பெரும் போராட்டங்களுக்குப் பிறகு 1984ஆம் ஆண்டு திருமணம் செய்தார் அனில் கபூர்.
இந்நிலையில், இன்று அனில் கபூர் - சுனிதா தம்பதியினர் தங்களது 36ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் நிலையில், இருவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து இவர்களது மகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார்.
அதில் ”இருவருக்கும் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள். உங்கள் இருவரையும் மிகவும் நேசிக்கிறேன், 11 வருட காதல் வாழ்விலும், 36 வருட திருமண வாழ்விலும் நீங்கள் இருவரும் இணைந்து இருந்துள்ளீர்கள். இது அவ்வளவு எளிதல்ல!