தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடி தளத்தில் கால்பதிக்கும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் - தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் டிஜிட்டல் தளமான ஓடிடியில் தங்களது சொந்த பெயரில் ஓடிடி தளத்தை உருவாக்க ரூ.500 கோடியை முதலீடு செய்துள்ளது.

Yash Raj
Yash Raj

By

Published : Nov 12, 2021, 2:39 PM IST

பாலிவுட்டின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் (ஒய்.ஆர்.எஃப்.) நிறுவனம் இருந்துவருகிறது. இந்த நிறுவனம் பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்துள்ளது.

இந்த நிறுவனமானது மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தை அவரது மகனும் இயக்குநருமான ஆதித்யா சோப்ரா நிர்வாக இயக்குநராக இருந்து நிர்வகித்துவருகிறார்.

இந்நிலையில், ஆதித்யா சோப்ரா டிஜிட்டல் தளமான ஓடிடியில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்னும் பெயரில் புதிய ஓடிடியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளார். இதற்காக அவர்கள் கடந்த இரண்டுகளாக அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஏற்கனவே 2021 - 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரூ.1,200 கோடி முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது ஓடிடியில் ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் திரைப்படத் துறையிலும் திரைப்படங்களும் புது மாற்றங்கள் வரும் எனத் திரைப்படத் துறையைச் சார்ந்த வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஓடிடியில் வெளியானால் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திற்கு மைல் கல்லாக இருக்கும். உலகளாவிய பார்வையாளர்களுக்கு சிறந்த கதைகளைப் பார்வைக்குப் பிரமாண்டமான முறையில் சொல்ல உதவியாக இருக்கும்.

இது போன்ற ஓடிடி தளங்கள் இப்போது மொழித் தடையைக் குறைத்து, கலாசாரங்கள், திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்துகின்றன. இதை ஆதித்யா சோப்ரா பன்னாட்டுத் தரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் ரசிகர்களுக்கு அவர் சிறந்த அனுபவத்தை வழங்குவார் என்றனர்.

இதையும் படிங்க: யாஷ் ராஜ் பிலிம்ஸ் புதிய லோகோ வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details