மும்பை: சைக்கிள் மெக்கானிக்கிடம் ஒரு ரூபாய் 25 பைசா பாக்கி வைத்துவிட்டு கொடுக்காமல் மறந்த கதையை சல்மான் கான் நினைவுப்படுத்தினார்.
உமாங் என்ற பெயரில் மும்பை காவல் துறையினர் நடத்திய நிதி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் சல்மான் கான், பிரபல காமெடியன் கபில் ஷர்மாவிடம் உரையாடினார். அப்போது, சிறுவயதில் சைக்கிள் மெக்கானிக்கிடம் ரூ. 1.25 பைசா பாக்கி வைத்த கதையை விவரித்தார்.
அதில், டவுசர் அணிந்து கையில் பணம் ஏதும் இல்லாமல் இருந்த நான், சைக்கிள் கடைகாரரிடம் எனது வண்டியை ரிப்பேர் செய்ய சொன்னேன். அந்தப் பணிக்கான பணத்தை பின்னர் தருவதாக கூறினேன். ஆனால் மறந்துவிட்டேன்.
பின் மறுபடியும் எனது சைக்கிள் டயரை சரி செய்தபோது மீண்டும் அவரை சந்தித்தேன். அப்போது இதேபோன்று எனது சிறு வயதில் சைக்கிளை ரிப்பேர் செய்தீர்கள். நான் உங்களுக்கு பணம் தருகிறேன் என்று கூறிவிட்டு தற்போது வரை தரவில்லை. ஒரு ரூபாய் 25 பைசா உங்களுக்கு பாக்கி வைத்திருக்கிறேன் என்று கூறினேன்.
அந்தச் சூழ்நிலை எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பின்னர் நான் தர வேண்டிய பாக்கியை அவரிடம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார் என்றார்.
மேலும், பெட்ரோல் பணத்தை சேமிப்பதற்காக பாதி பெட்ரோல், பாதி மண்ணென்னெய் ஊற்றி வண்டி ஓட்டிய கதை பற்றியும் பேசினார்.
'தபாங் 3' படத்தின் வெற்றியால் குஷியில் இருக்கும் சல்மான் கான் அடுத்ததாக 'ராதே' படத்தின் பணிகளில் பிஸியாக உள்ளார்.