தற்போது வெப்சீரிஸ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருப்பதால் புதுமையான தொடர்கள் நாள்தோறும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் நெட்பிளிக்ஸ் இணைய சேனலில் கடந்தாண்டு வெளியாகி பெரியளவில் வரவேற்பை பெற்ற தொடர் 'லஸ்ட் ஸ்டோரிஸ்'.
நான்கு கதைகள் சேர்ந்து ஒரே தொடராக அமைந்திருந்த இதில், 'தோனி' வாழ்க்கை வரலாறு படத்தின் கதாநாயகியாக நடித்திருந்த கைரா அத்வானி பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து குறிப்பிட்ட காட்சி ஒன்றில், குடும்பத்தினர் முன்னிலையில் சுயஇன்பம் அனுபவிப்பது போன்று கைரா அத்வானி நடித்திருப்பார். இந்தக் காட்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதுகுறித்து தகவல் ஒன்றை கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கைரா அத்வானி.