ஹைதராபாத்: இரண்டு குழந்தைகளுக்கு தயானா பாலிவுட் நடிகை கஜோல், தனக்கு சிறு வயதிலேயே ஒரு குழந்தையை தத்தெடுக்கும் ஆசை இருந்தது குறித்து தெரிவித்துள்ளார்.
8 வயதிலேயே ஒரு குழந்தையை தத்தெடுக்க ஆசைப்பட்டேன் - கஜோல் - அஜய் தேவ்கன்
என் 18 வயது வரை அந்த எண்ணம் எனக்கு மாறவில்லை. ஆனால், என் அம்மா அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. அந்தக் குழந்தையையும் நான்தான் வளர்க்க வேண்டும், சும்மா இரு என மறுத்துவிட்டார் என கஜோல் தெரிவித்தார்.
![8 வயதிலேயே ஒரு குழந்தையை தத்தெடுக்க ஆசைப்பட்டேன் - கஜோல் When Kajol wanted to adopt a child at the age of 8](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10276155-144-10276155-1610884018378.jpg)
நைஷா தேவ்கன், யுக் தேவ்கன் என இரு குழந்தைகளுக்கு தாயான நடிகை கஜோல், காணொலி வாயிலாக நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தனக்கு 8 வயதிலேயே ஒரு குழந்தையை தத்தெடுக்க ஆசை இருந்ததாக தெரிவித்தார். ஆனால், தனது பெற்றோரின் மாற்றுக்கருத்து காரணமாக அது நிறைவேறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், நான் குழந்தையாக இருக்கும்போதே தாய்மையை உணர்ந்தேன். வேறொரு குழந்தைக்கு தாயாக விரும்பினேன். 8 வயதிலேயே ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினேன். என் 18 வயது வரை அந்த எண்ணம் எனக்கு மாறவில்லை. ஆனால், என் அம்மா அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. அந்தக் குழந்தையையும் நான்தான் வளர்க்க வேண்டும், சும்மா இரு என மறுத்துவிட்டார். அதன்பிறகு அதை மறந்துவிட்டேன். திருமணமானவுடன் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.