தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓப்பீடு எனக்கு பிடிக்காது - ஜான்விகபூர் - ஜான்வி கபூரின் புதிய படங்கள்

மும்பை: சிறிய பெண்ணாக இருந்ததால் சினிமா துறைக்கு வருவது குறித்து தனது தாயார் ஸ்ரீதேவி கவலைப்பட்டதாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளளார்.

Janhvi
Janhvi

By

Published : Apr 17, 2021, 6:13 PM IST

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரன் இஷான் கட்டார் ஆகியோர் 2018ஆம் ஆண்டு வெளியான 'தடக்' என்ற இந்திப் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானர்கள். மராத்தி மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'சாய்ரத்' படத்தின் இந்தி ரீமேக்கான 'தடக்' ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகை ஜான்விகபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். மலையாள திரைப்படமான ஹெலன் இந்தி ரீமேக்கில் ஜான்விகபூர் நடிக்கவுள்ளார். ஜான்விகபூரின் தடக் படம் வெளியாகும் முன்பே ஸ்ரீதேவி மறைந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜான்விகபூர், "ஸ்ரீதேவி 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நான் சிறிய பெண்ணாக இருந்ததால் சினிமா துறைக்கு வருவது குறித்து ஸ்ரீதேவி கவலைப்பட்டதாக தெரிவித்தார். இருப்பினும் அவர் எனறும் ஒப்பிட்டு பேசியதில்லை என்றும் ஜான்விகபூர் கூறினார். எனக்கு அது பிடிக்காத செயல். எனவே ரசிகர்களும் தன்னை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட மாட்டார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details