பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் முன் ரன்பீர் கபூருடன் பழகிவந்தார். அப்போது அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வர் எனச் செய்திகள் அடிக்கடி உலா வந்தன. ஆனால் திடீரென இருவரும் பிரிந்தனர்.
இதன்பின் தீபிகா ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டார். ரன்பீர் கபூர் தற்போது ஆலியா பட்டுடன் பழகிவருகிறார். இவர்கள் திருமணம் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தனது கடந்த கால உறவுமுறை குறித்து பகிர்ந்துள்ளார் தீபிகா. அதில் அவர் கூறியதாவது:
என்னைப் பொறுத்தவரை பாலியல் வேட்கை என்பது வெறும் உடல் ரீதியானது மட்டுமல்ல; உணர்வுகள் ரீதியானதும்கூட. என்னுடன் இருப்பவர்களை நான் எப்போதும் ஏமாற்றும் நோக்குடனும் அவர்களை வழிதவறவைக்கும் நோக்குடனும் இதுநாள் வரை பழகியது கிடையாது.