பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், மௌனி ராய், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'பிரம்மாஸ்த்ரா'. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்குகிறார். நடிகை யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ், அபூர்வா மேத்தா, நமித் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர். இப்படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியாகிறது.
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் 'பிக் பி’ அமிதாப்பச்சன், தற்போது அதில் ஒரு புதிய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், அஜூபா படத்தின் படப்பிடிப்பின் போது முன்னாள் பாலிவுட் நடிகர் சஷி கபூருடன் நின்றிருந்த, குழந்தை ரன்பீர் கபூரை அமிதாப் கொஞ்சி வாழ்த்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் 'இப்போது அப்போது' கேப்ஷனும் கொடுத்துள்ளார்.