தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தமிழ்ப் பட தயாரிப்பாளரால் நேர்ந்த அவமானம் - விவரித்த வித்யாபாலன் - வித்யா பாலன் படங்கள்

இதெல்லாம் ஹீரோயினுக்கான முகமா? இயக்குநர் சொன்னதால்தான் வாய்ப்பு அளித்தேன் என்று தயாரிப்பாளர் அவமானப்படுத்தியதை எண்ணி மிகவும் அருவருப்பாக உணர்ந்தேன் என்று நடிகை வித்யாபாலன் தமிழ் சினிமாவில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து விவரித்துள்ளார்.

நடிகை வித்யா பாலன்

By

Published : Aug 27, 2019, 8:52 PM IST

மும்பை: சிறந்த நடிகைக்கான தேசிய விருது, பாலிவுட்டின் டாப் நடிகை என பெயர் பெற்றிருக்கும் வித்யாபாலன், சினிமாவின் ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளரால் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியான ’தி டர்ட்டி பிக்சர்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியவர் நடிகை வித்யா பாலன். பாலிவுட்டில் டாப் நடிகையாகத் திகழும் அவர், திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார். இவரது படங்கள் பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பாலக்காடு பகுதியை பூர்வீகமகக் கொண்ட இவர், தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் மலையாளம் மற்றும் தமிழ் வாய்ப்புகளைத் தேடினார். சில படங்களில் வாய்ப்பு அளிக்கப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டார். இதையடுத்து தனது பார்வையை பாலிவுட் பக்கம் திருப்பி அங்கே வெற்றிக்கொடி நாட்டினார்.

வித்யாபாலன் பெங்காலி படமான பாலோ தேக்கோ படத்தில் அறிமுகமானாலும், ஹிந்தியில் அறிமுகமான பிரணீதா படத்தில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ஹிந்திப் படங்கள் பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், தனது ஆரம்ப காலத்தில் தமிழ்ப் பட தயாரிப்பாளரால் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

”தென்னிந்திய படங்களில் நான் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன். பல மலையாளப் படங்களில் ஒப்பந்தமாகி, எனக்கு பதிலாக வேறொருவர் சேர்க்கப்பட்டார். ஒரு தமிழப் படத்தில் நடித்தேன். பின்னர் என்னை அவர்கள் திடீரென படத்திலிருந்து தூக்கிவிட்டனர்.

இதனையடுத்து தயாரிப்பாளர் அலுவலகம் சென்று விசாரித்தபோது, படத்தின் கிளப்பிங்கை காட்டி, இதெல்லாம் ஹீரோயினுக்காக முகமா? என்று கேட்டார். மேலும், எனக்கு இவரை நடிக்க வைக்க கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. இயக்குநர் கூறியதால் ஒப்பந்தம் செய்தேன் என்றார்.

இதைக்கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் அருவருப்பாக உணர்ந்தேன். சில மாதங்கள் கண்ணாடியில் என் முகத்தை பார்க்காமல் இருந்தேன். என்னை அவமானப்படுத்திய அந்த தயாரிப்பாளரை நீண்ட நாட்கள் நான் மன்னிக்கவில்லை. ஆனால் தற்போது நான், நானாக இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழ் படம் ஒன்றுக்கு தொலைப்பேசி மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். இதனைத்தொடர்ந்து சென்னைக்கு சென்று அதன் படப்பிடிப்பில் பங்கேற்றேன். அப்போது மிகவும் அசெளகரியமாக உணர்ந்தேன். படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள், வசனங்கள் இரட்டை அர்த்தங்களுடன் இருந்தது. இதனால் படத்திலிருந்து விலகினேன். அந்தப் படக்குழுவினர் எனக்கு நோட்டீஸ் அனுப்பினர்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details