இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது-2020 ஆம் ஆண்டுக்கு நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
கரண் ஜோஹருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீயை திரும்ப பெற வேண்டும் - கங்கனா ரனாவத் - பத்மஸ்ரீ விருதுகள்
மும்பை: இயக்குநர் கரண் ஜோஹருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீயை திரும்பத் தருமாறு, இந்திய அரசிடம் நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், கரண் ஜோஹருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை இந்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுமென கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சர்வதேச விழா மேடை ஒன்றில் கரண் ஜோஹர் என்னை வெளிப்படையாகவே மிரட்டினார். மேலும் நான் சீக்கிரம் திரைத்துறையில் இருந்து வெளியேற வேண்டுமெனவும் கூறியிருந்தார்.
இவர்தான் சுஷாந்த் சிங்கை சதிசெய்து அவரது வாழ்க்கையை அழித்துவிட்டார். இப்போது கூட நமது ராணுவத்தை இழிவுபடுத்தும் விதமாக ‘குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்’ என்னும் படத்தை தயாரித்துள்ளார். இது நமது அரசுக்கு எதிராக செய்யும் ஒரு தேச துரோகம் என்று கூறியுள்ளார்.