தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஷாருக்கான் ரசிகர் தற்கொலை மிரட்டல் - ட்விட்டரை ஆக்கிரமித்த #ஹேஷ்டேக் - பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்

#WeWantAnnouncementSRK: ஷாருக்கான் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி அவரது தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

SRK
SRK

By

Published : Dec 31, 2019, 10:42 AM IST

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜீரோ படம் படுதோல்வியடைந்தது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாராகி பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி அப்படியே திரையரங்குகளை விட்டு வெளியேறியது.

இந்த நிலையில், ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாமல் இருந்தது. ஓர் ஆண்டுக்கும் மேலாக இதுவரை அவர் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ஷாருக்கான் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது ரசிகர் ஒருவர் நூதன முறையில் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புத்தாண்டு தினத்தில் ஷாருக்கான் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருக்கிறார்.

ஷாருக்கான் ரசிகரின் ட்வீட் பதிவு

மேலும், #WeWantAnnouncementSRK என்ற ஹேஷ்டேக் வழியாக ட்வீட் செய்யும் அவரது ரசிகர்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர். அதில் ரசிகர் ஒருவர், கான் சார் போதும் போதும். ஜீரோ படத்திற்குப் பின் உங்கள் படங்களைப் பார்க்க முடியவில்லை. விரைவில் ஒய்ஆர்எஃப் தூம் அல்லது அட்லி குமாரின் படங்களில் நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஷாருக்கான் ரசிகர்களின் ட்வீட் பதிவுகள்

இதுபோன்று அவரது ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை #WeWantAnnouncementSRK ஹேஷ்டேக் மூலம் பகிர்ந்து இணையத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

இதையும் படிங்க...

ஆதித்யா அருணாச்சலத்தின் 'தர்பார்' - புகைப்படத் தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details