பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் கரீனா கபூர். சமெலி (chameli), தேவ் (Dev), ஓம்கரா (omkara) எனப் பல திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 19 ஆண்டுகளுக்கு மேல் திரைத் துறையில் வெற்றிகரமான நடிகையாகத் திகழ்ந்துவருகிறார். பாலிவுட் நடிகரான சயீப் அலி கான் - ராணி முகர்ஜி ஆகியோர் 'டா ரா ரம் பும், ஹம் தும்' படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்போது இருவரும் நட்பாகப் பழகி திருமணம் செய்துகொண்டனர்.
இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் கரீனா கபூர் தற்போது இணைந்துள்ளார். இவரைக் கரீனாவின் சகோதரி கரிஷ்மா கபூர், இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோர் வரவேற்றனர் .