மூன்று முறை தேசிய விருது பெற்ற நடனக் கலைஞரான சரோஜ் கான் மாரடைப்பு காரணமாக ஜூலை மூன்றாம் தேதி உயிரிழந்தார். 71 வயது நிரம்பிய இவர் பல இந்தித் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
'ஏக் தோ டீன் ' பாடலுக்கு 20 நிமிடங்களில் கொரியோகிராஃப் - சரோஜ் கான் குறித்து நினைவுகூர்ந்த மாதுரி தீட்சித் - மறைந்த நடன இயக்குனர் சரோஜ் கான்
மும்பை : மறைந்த நடன இயக்குநர் சரோஜ் கான் குறித்து நடிகை மாதுரி தீட்சித் நினைவு கூர்ந்துள்ளார்.
இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மாதுரி தீட்சித் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், சரோஜ் கான், மாதுரி தீட்சித்திடம் ஏக்கு தோ தீன் பாடலின் வரிகளை பாடிக் காண்பித்து நடனம் ஆடுகிறார். அது மட்டுமல்லாது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் இருவரும் நடுவராக இருந்த போது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அதில் மாதுரி இணைத்துள்ளார்.
சரோஜ் கானுடன் மாதுரி தீட்சித் ஒரு பெரிய பிணைப்பைக் கொண்டிருத்த நிலையில், ’ஏக் தோ தீன்’ பாடலுக்கு சரோஜ் கான் 20 நிமிடங்களில் கொரியோகிராஃப் செய்ததாக மாதுரி தெரிவித்துள்ளார்.
”அவர் மிகுந்த நினைவாற்றல் கொண்டவர். ஒவ்வொரு பாடலையும், அதன் இசையும் மிக நுணுக்கமாக கவனிப்பார். ஏற்கனவே அவர் உபயோகித்த நடன அசைவுகளை அடுத்த பாடலில் பயன்படுத்தவே மாட்டார். தனது ஒவ்வொரு நடன அசைவையும் நினைவில் வைத்துக் கொள்வார். ஒவ்வொரு பாடலும் தனித்துவமாக இருக்க வேண்டும் என விரும்புவார். நான் அவருடன் நிறைய பாடல்களில் பணியாற்றியதை குறித்து மிகவும் பெருமையாக உள்ளது.