ஹைதராபாத்: இரண்டு மகள்களுக்கு தாயான முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென், தனது மகள் அலிஷா சென் தனக்கு அன்னையர் தினத்தன்று கொடுத்த பரிசு குறித்து பதிவு செய்துள்ளார்.
அலிஷா தன்னைப் பற்றி பேசியோ வீடியோ ஒன்றை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, ஒவ்வொரு அன்னையர் தினத்தன்றும் இவள் இப்படி எனக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது வழக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
அதில், ”ஒவ்வொரு ஓவியங்களும் கையால் வரையப்பட்டவை. பணத்தால் பெற முடியாத காதலை இது உணர்த்துகிறது. ஒவ்வொரு அன்னையர் தினத்தன்றும் இவள் இப்படி எனக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது வழக்கம். ஐ லவ் யூ அலிஷா, நீ எப்போதும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாய். இந்த உலகத்துக்கு உன்னைப் போன்ற ஒரு இதயம் தேவை. உம்மா...” என சுஷ்மிதா குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமில்லாது அன்னையர் தின சிறப்பு பகிர்வாக, சுஷ்மிதா தனது அன்னையுடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.