தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அன்பானவருடன் காலை உணவு அருந்திய சல்மான் கான் - சல்மான் கான்

குதிரைக்கு காலை உணவான இலையை கொடுக்கையில் முதலில் உண்ண அந்த குதிரை மறுக்கிறது. பின் அதில் ஒரு இலையை சல்மான் கான் சாப்பிட பின் குதிரையும் சாப்பிடுகிறது.

Salman Khan
Salman Khan

By

Published : Apr 11, 2020, 1:11 PM IST

பாலிவுட் நடிகர் சல்மான்கான் குதிரையுடன் புல் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

கரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது குடும்ப உறுப்பினர்களுடன் மும்பைக்கு அருகில் இருக்கும் பன்வேலில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த பண்ணை வீட்டில் சல்மான் கான் கறுப்பு குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். தற்போது அங்கு இருக்கும் சல்மான் கான் அக்குதிரையுடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.

இதனயைடுத்து அக்குதிரைக்கு காலை உணவான இலையை கொடுக்கையில் முதலில் சாப்பிட அந்தக் குதிரை மறுக்கிறது. பின் அதில் ஒரு இலையை சல்மான் கான் சாப்பிட்ட பின் குதிரையும் சாப்பிடுகிறது. இலையை சாப்பிட்ட சல்மான் கான் ரொம்ப நல்லா இருக்கு எனக் கூறினார். இதனை வீடியோவாக பதிவு செய்துள்ள சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோவுக்கு தலைப்பாக ’எனது அன்புடன் காலை உணவு’ என தலைப்பிட்டுள்ளார். மற்றொரு வீடியோவில், சல்மான் கான் இலைகளை தனது தலையில் வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்துள்ளார். அதை குதிரை வந்து சப்பிடுகிறது. பின் அக்குதிரையின் மேல் ஏறி சிறிது நேரம் சவாரி செய்கிறார். இந்த வீடியோவையும் சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்களை ரசிகர்கள் தற்போது அதிகம் லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் வாசிங்க: ‘பாந்த்ரா ஃப்ளாட் எனக்கு ஒரு குடும்பம் போன்றது’ - சல்மான் கான்

ABOUT THE AUTHOR

...view details