கரோனா தொற்றை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை உலகம் நாடுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்திவருகின்றன. இதனையடுத்து கரோனா தொற்றைத் தடுக்கும் முயற்சியில் கடுமையாக போராடி வரும் மருத்துவப் பணியாளர்களுக்காக உலக சுகாதார நிறுவனம் சார்பில் 'ஒன் வேர்ல்ட்: டூ கெதர் அட் ஹோம்' என்ற ஆன்லைன் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70 கலைஞர்களுடன் ஷாருக்கானும் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் லேடி காகா, பில்லி ஜோ ஆர்ம்ஸ்ட்ராங், க்ரிஸ் மார்ட்டின், டேவிட் பெக்காம், ஜெனிஃபர் லோபஸ், ஓப்ரா வின்ஃப்ரே, பிரியங்கா சோப்ரா, டெய்லர் ஸ்ஃப்ட் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.