ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திரைத்துறையில் நீடிக்க நண்பர்களே காரணம்! - பாலிவுட் குறித்து வித்யுத் ஜம்வால்

தான் ஒரு நட்சத்திரத்தின் மகன் கிடையாது என்றும், தனது நண்பர்களால் மட்டுமே திரைத்துறையில் நீடித்து நிற்பதாக பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் தெரிவித்துள்ளார்.

Vidyut Jammwal on bollywood friendship
Vidyut Jammwal on bollywood friendship
author img

By

Published : Jul 24, 2020, 8:25 PM IST

'பாலிவுட்டில் ஒருவரால் நண்பர்களை உருவாக்கமுடியாது' என்ற கூற்றை தன்னால் ஒப்புக்கொள்ளமுடியாது என நடிகர் வித்யுத் ஜம்வால் தெரிவித்துள்ளார்.

தான் பெரிய நட்சத்திரத்தின் மகன் கிடையாது என்று குறிப்பிட்ட அவர் திரைத்துறையில் நீடித்து நிற்பதற்கு தனது நட்புதான் காரணம் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து வித்யுத் கூறுகையில், "சினிமா துறையில் நான் காலடி எடுத்துவைத்த நாள் முதல் என்னால் இந்தத் துறையில் நல்ல நண்பர்களை சம்பாதிக்கமுடியாது என்றார்கள். ஆனால் அதை நான் நம்பவில்லை. நான் ஒரு நட்சத்திரத்தின் குழந்தை கிடையாது.

எனது நட்பினால் மட்டும்தான் இங்கு நான் நிலைத்து நிற்கிறேன். என் நண்பர் ஒருமுறை, நான் உன்னை நம்புகிறேன், ஆனால் என்னிடம் பட்ஜெட் இல்லை என்று கூறினார். நான் என் நண்பர்களுக்கு எப்படி உறுதுணையாக நின்றேனோ, அதுபோலவே என் நண்பர்களும் எனக்கு உறுதுணையாக நின்றார்கள்" என்றார்.

தற்சமயம் தனது நடிப்பில் வெளிவர இருக்கும் 'யாரா' திரைப்படத்தை வித்யுத் ஜம்வால் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க...தண்ணீரில் நடக்கும் வித்தையை என் யூடியூப் சேனலில் பாருங்க

ABOUT THE AUTHOR

...view details