தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஷூட்டிங்கிற்கு செல்ல விரும்பி புகைப்படம் பகிர்ந்த வித்யா பாலன் - வித்யா பாலன் குறித்த செய்திகள்

கரோனா ஊரடங்கால் படப்பிடிப்புத் தளத்தை பிரிந்து வாடும் நடிகை வித்யா பாலன் ஷூட்டிங் செல்வது பற்றி குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

வித்யா பாலன்
வித்யா பாலன்

By

Published : May 20, 2020, 11:17 PM IST

கரோனா ஊரடங்கில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், எவ்வித படப்பிடிப்புகளும் நடைபெறாமல் கடந்த 57 நாட்களாக திரைத்துறையினரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், பிரபல நடிகை வித்யா பாலன், தன் ரசிகர்களை உற்சாகப்படுத்து விதத்தில், ஷூட்டிங்கிற்கு செல்லலாமா எனக் கேட்டு தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

போல்கா பிரிண்ட் செய்யப்பட்ட உடையணிந்து, தன் ஐ பேடின் முன்பக்க காமிராவை ஆன் செய்து முகம் தெரியும்படி இந்த புகைப்படத்தில் அமர்ந்துள்ள வித்யா, ஷூட்டிங்கிற்குத் திரும்பலாமா எனக் கேட்டு பதிவிட்டுள்ளார்.

வித்யா பாலன்

தற்சமயம் விரைவில் வெளிவரவிருக்கும் ’ஷகுந்தலா தேவி’ திரைப்படத்தில் தோன்றவுள்ள வித்யா பாலன், இந்தப் படத்தில் மனிதக் கணினி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் ஓடிடி தளமான அமேஸான் ப்ரைமில் விரைவில் வெளிவர உள்ளது.

இதையும் படிங்க :அமெரிக்க நடிகைக்கு கமல்ஹாசன் கொடுத்த பரிசு

ABOUT THE AUTHOR

...view details