இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'துருவங்கள் பதினாறு'. இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாது விமர்சனங்கள் ரீதியாகவும் பெரும் ஹிட் அடித்தது. தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
'துருவங்கள் பதினாறு' இந்தி ரீமேக்கில் வருண் தவான்! - varun dhawan upcoling films
ஹைதராபாத்: பாலிவுட் நடிகர் வருண் தவான் தமிழ் திரில்லர் படமான 'துருவங்கள் பதினாறு' படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Varun Dhawan
இந்தியில் 'சாங்கி' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை சஜித் நதியாட்வாலா இயக்குகிறார். இதில் வருண் தவானுக்கு ஜோடியாக பரினீதி சோப்ரா நடிக்கவுள்ளார்.
விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பிற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகத் தமிழில் சூப்பர் ஹிட் அடித்த தமிழ் படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.