தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் புதிய பரிணாமத்தில் 'முக்காலா முக்காபுலா' - முக்காபுலா பாடலுக்கு நடனமாடிய பிரபுதேவா

வித்தியாசமான நடன அசைவுகளால் இருபத்தைந்து ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் குடிபுகுந்திருக்கும் சூப்பர்ஹிட் பாடலான "முக்காலா முகாபுலா" பாடல், மீண்டும் பிரபுதேவாவின் மேஜிக்கல் நடனத்துடன் புதுபிக்கப்பட்டுள்ளது.

Street Dancer 3D movie
Prabhudheva recreate Muqabla song

By

Published : Dec 21, 2019, 6:09 PM IST

Updated : Dec 21, 2019, 6:24 PM IST

மும்பை: பிரபுதேவா நடனங்களின் மேஜிக்கை நிகழ்த்திய "முக்காலா முக்காபுலா" பாடல் விரைவில் வெளியாகவிருக்கும் ஸ்டீரிட் டான்ஸர் 3டி பாலிவுட் படத்துக்காக ரீகிரியேட் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1994இல் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வெளியான படம் காதலன். இந்தப் படத்தில் இடம்பெற்ற "முக்காலா முக்காபுலா" என்ற பாடல் தமிழில் மட்டுமல்ல நாடுமுழுவதும் சூப்பர்ஹிட்டானது. குறிப்பாக இந்தப் பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதமும், பாடலின் இறுதியில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த ட்ரம் பீட்டுக்கு பிரபுதேவா ஆடிய அசத்தல் நடனமும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.

இந்தப் பாடலை தற்போது வருண்தவான், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் ஸ்டீர்ட் டான்ஸர் 3டி படத்துக்காக ரீகிரியேட் செய்துள்ளனர். பாடலை யஷ் நர்வேகர், பரம்பரா தாக்கூர் பாட, ராகுல் ஷெட்டி, ராஜுசுந்தரம் ஆகியோர் இணைந்து நடனம் அமைத்துள்ளனர். இதுதொடர்பாக ஒரிஜினல் பாடலுக்கு இசையமைத்த ஏஆர் ரஹ்மானும் ட்வீட் செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் "முக்காலா முகாபுலா" பாடலின் 2.50 நிமிட விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், பிரபுதேவா நடனமாட, அவரைப் பின்தொடர்ந்து வருண் தவான், ஷ்ரத்தா கபூர் மற்றும் நடன கலைஞர்கள் ஒன்று சேர்ந்து நடனமாடுகிறார்கள்.

ஒரிஜினல் பாடலில் இருப்பது போன்ற மேஜிக்கை இந்தப் பாடலிலும் புதிய பரிணாமத்தில் உருவாக்க முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் ரெமோ டிசோசா கூறியதாவது,

சிறப்பு மிகுந்த இந்தப் பாடலை பிரபுதேவாவுக்காக உருவாக்குவேன் என்று நினைத்துக்கூட பார்த்தில்லை. இப்பாடலில் இடம்பெற்ற குழுவினர் அனைவருக்கும் சிறப்பான தருணம்தான். ஒரிஜினல் பாடலை ரசித்தது போன்று இந்த புதிய வெர்ஷனையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம் என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான பிரச்னையை நடனம் மற்றும் இசை மூலமாக பேசும் படமாக ஸ்டீரிட் டான்ஸர் 3டி படம் உருவாகி வருகிறது. படத்தின் ட்ரெய்லர் கடந்த இரு நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Last Updated : Dec 21, 2019, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details