ராஜ் மேத்தா இயக்கத்தில் வருண் தவான், அனில் கபூர், நீத்து கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் திரைப்படம் ’ஜக் ஜக் ஜீயோ’. கரண் ஜோகர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 17ஆம் தேதி சண்டிகரில் தொடங்கியது. இந்த சூழலில், கதாநாயகன் வருண் மற்றும் இயக்குநர் ராஜ் மேத்தா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவர் தவிர்த்து, மற்ற படக்குழுவினர் மும்பை திரும்பினர். அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்த பின்பு படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.
'ஜக் ஜக் ஜீயோ' படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்ட வருண் தவான் - கியாரா அத்வானி லேட்டஸ் செய்திகள்
புது டெல்லி: கரோனா தொற்றிலிருந்து மீண்ட வருண் தவான் மீண்டும் ஜக் ஜக் ஜீயோ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
சிகிச்சைக்கு பின் வருண் தாவன் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார். இதனையடுத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பில் வருண் தவான் கியாரா அத்வானி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து வருண் தவான் தனது சமூகவலைதளப்பக்கத்தில் கியாரா அத்வானியுடன் இருக்கும் செல்ஃபியை பகிர்ந்து கொண்டு ஆரோக்கிய கூட்டாளியுடன் ஜக் ஜக் ஜீயோ மூலம் திரும்பி வந்துள்ளோம் என பதிவிட்டுள்ளார். நகைச்சுவை நடிகர் நீத்து கபூர் 7 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதில் கியாரா அத்வானியும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.