'பெல் பாட்டம்' கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும் - வாணி கபூர் - நடிகை வாணி கபூர்
'பெல் பாட்டம்' திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் புதுமையானது என நடிகை வாணி கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் தற்போது எதிர்பார்ப்பில் இருக்கும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் 'பெல் பாட்டம்'. அக்ஷய் குமார் நடிக்கும் இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வாணி கபூர் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்.
இதுகுறித்து வாணி கபூர் கூறுகையில், "நான் அக்ஷய் சாருடன் நடிக்க இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். படம் தொடங்கும் ஆரம்ப நிலையிலேயே என்னை வீட்டில் இருப்பதைபோல் உணரவைத்த படக்குழுவில், ஒரு அங்கமாய் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த உற்சாகம் படத்தில் அழகாய் கொண்டுசேர்க்கப்படும் என்று நம்புகிறேன்" என்றார்.
1980களில் நடக்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உண்மைச் சம்பவங்களை வைத்து இந்தத் திரைப்படம் உருவாகிவருகிறது. ரஞ்சித் எம். தேவாரி இயக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடப்பாண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் நடிகை வாணி கபூர் இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து அறிவித்துள்ளார். கதாபாத்திரம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, 'பெல் பாட்டம்' திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும் என நான் நம்புகிறேன்.
இக்கதாபாத்திரம் என் திரை வாழ்வில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும். அதுமட்டுமல்லாது நான் இதுவரை செய்திராத கதாபாத்திரமும் கூட. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
பெல் பாட்டம் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் இங்கிலாந்தில் தொடங்கும் என சமீபத்தில் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
நான் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன். இதற்கு நாங்கள் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது எனவும் வாணி தெரிவித்துள்ளார்.