பாலிவுட்டில் கடந்த 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் 'பெல்பாட்டம்'. ரஞ்சித் எம் திவாரி இயக்கும் இப்படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க உள்ளார்.
ரொம்ப சந்தோசமா இருக்கு 'பெல் பாட்டம்' வாணிகபூர் - பெல்பாட்டம் திரைப்படத்தில் வாணிகபூர்
மும்பை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என நடிகை வாணி கபூர் கூறியுள்ளார்.
அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அக்ஷய் குமார் உடன் வாணி கபூர் நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஸ்காட்லாந்தில் தொடங்கும் என சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் படக்குழுவினர் தனி விமானம் மூலம் ஸ்காட்லாந்துக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து வாணி கபூர் படப்பிடிப்புக்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வாணி கபூர் கூறியதாவது, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எனது வேலையை ஆரம்பிக்கிறேன்.
இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் நான் நிச்சயம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மனதில் வைத்துக்கொண்டு ஒரு புதிய பயணத்தை மேற்கொள்வது மிகவும் உற்சாகமாக இருக்கிறது" என்று கூறினார்.