தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்த ஊரடங்கால எனக்கு ஒரு நல்லது நடந்திருக்கு - வாணி கபூர் - தேசிய ஊரடங்கு உத்தரவு

மும்பை: கடந்த சில மாதங்களாக எனது முகத்தில் ஒப்பனை இல்லாததை அடுத்து எனது சருமம் மிகவும் பொலிவாகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது என நடிகை வாணி கபூர் கூறியுள்ளார்.

வாணி கபூர்
வாணி கபூர்

By

Published : Jul 18, 2020, 12:43 AM IST

பாலிவுட் நடிகை வாணி கபூர், தற்போது அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகிவரும் பெல்பாட்டம் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கடந்த சில மாதங்களாக கரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக, தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இதனால் அனைத்து வித படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த ஊரடங்கு காலத்தால் தனது முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் இருந்ததால் சருமம் தற்போது பொலிவுடனும், புத்துணர்ச்சியுடன் இருப்பதாக வாணி கபூர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,"இயற்கையாகவே நமது சருமம் ஒப்பனை இல்லாமல் பொலிவுடனும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக ஒப்பனை செய்து கொள்ளாமல் இருந்தது, இனி அடுத்தடுத்து அலங்காரம் செய்யும்போது புத்துணர்ச்சி மாற்றத்தை கொடுக்கும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details