பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா தனது நினைவுக் குறிப்புகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிட இருப்பதாக முன்னதாகத் தெரிவித்திருந்த நிலையில், ’அன்ஃபினிஷ்ட்’ எனும் பெயரில் தற்போது அப்புத்தகம் வெளிவரவுள்ளது.
பிரியங்கா சோப்ரா தன் வாழ்வில் எழுதிய தனிப்பட்ட கட்டுரைகள், கதைகள், அவதானிப்புகள் உள்ளிட்டவற்றை அடக்கிய இப்புத்தகம், பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது.
இப்புத்தக வெளியீடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரியங்கா, " ’அன்ஃபினிஷ்ட்’ முடிக்கப்பட்டு இறுதி வடிவம் அச்சுப்பிரதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது நினைவுக் குறிப்பில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் எனது வாழ்க்கையில் என்னுள் நிகழ்ந்த உரையாடல்கள், பிரதிபலிப்பு ஆகியவற்றின் வெளிப்பாடே ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.