தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காலில் காயம் ஏற்பட்ட டைகர் ஷெராஃப்: பதறிய திஷா பதானி - டைகர் ஷெராஃப் கால்பந்து போட்டி

மும்பை: கால்பந்தாட்டப் போட்டியின்போது காயம் ஏற்பட்ட நடிகர் டைகர் ஷெராஃபுக்கு நடிகை திஷா பதானி உதவியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

Tiger
Tiger

By

Published : Feb 23, 2021, 10:01 AM IST

மும்பையில் செயல்பட்டுவரும் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் முயற்சியாக நடிகர்கள் டைகர் ஷெராஃப், அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் (பிப்ரவரி 21) நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் கலந்துகொண்டனர்.

இந்தப் போட்டியைக் காண டைகர் ஷெராஃபின் தோழியாகக் கருதப்படும் நடிகை திஷா பதானி வந்திருந்தார்.

கால்பந்தாட்டப் போட்டியில் டைகர் ஷெராஃப்

இந்தப் போட்டியின்போது டைகர் ஷெராஃபின் காலில் சிறிய காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த திஷா உடனே டைகரின் அருகே சென்று அவருக்கு உதவினார். மேலும் மைதானத்தில் இருந்த மருத்துவரும் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

டைகரின் காலில் சிறிய காயம் என்பதால் அவர் உடனே எழுந்து மைதானத்தை விட்டு வெளியே வந்தார். டைகருக்கு திஷா உதவியபோது எடுக்கப்பட்ட காணொலி, புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. மேலும் மைதானத்தை விட்டு வெளியேறிய டைகருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details