தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரசிகர்களுக்காக போலீஸ் செக் போஸ்ட் அருகே நடனமாடிய டைகர் ஷெராஃப் - பாகி 3 ஷுட்டிங்கில் டைகர் ஷெராஃப்

போலீஸ் செக் போஸ்ட் அருகே 'பாகி 3' படப்பிடிப்புக்கு இடையே ரசிகர்களுடன் இணைந்து நடனமாடியிருக்கிறார் நடிகர் டைகர் ஷெராஃப்

Tiger Shroff dances in Police Line post
Tiger Shroff in Baaghi 3 shoot

By

Published : Jan 8, 2020, 1:42 PM IST

'பாகி 3' திரைப்பட படப்பிடிப்புக்காக ஜெய்பூரில் முகாமிட்டுள்ள பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் போலீஸ் செக் போஸ்ட் அருகே ரசிகர்களுடன் இணைந்து நடனமாடி அவர்களை குஷிப்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகத் திகழும் டைகர் ஷெராஃப், தனக்கே உண்டான ஆக்‌ஷன், நடன காட்சிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவராகத் திகழ்கிறார்.

இவர் இந்தியில் சூப்பர் ஹிட்டான 'பாகி' படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் 'பாகி 3' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷ்ரத்தா கபூர், ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இதையடுத்து இந்தப் படத்தின் ஷுட்டிங் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்று படப்பிடிப்பில் பங்கேற்றார் டைகர் ஷெராஃப்.

அங்குள்ள போலீஸ் செக்போஸ்ட் அருகே நடைபெற்ற படப்பிடிப்பு குறித்து தகவல் அறிந்து ரசிகர்களும், பொதுமக்களும் கூடினர். இதையடுத்து பிஸியான நேரத்துக்கு இடையே கடந்த ஆண்டு தனது நடிப்பில் வெளியான 'வார்' படத்தில் இடம்பெறும் 'ஜெய் ஜெய் சிவ ஷங்கர்' பாடலுக்கு திடீரென நடனமாடிய டைகர் ஷெராஃப் அங்கிருந்தவர்களை குஷிப்படுத்தினார். மேலும், ரசிகர்கள் சிலரும் அவர் அருகே சென்று நடனமாடினர்.

முன்னதாக, நான்கு நாட்களுக்கு மேல் ஜெயப்பூரில் 'பாகி 2' படப்பிடிப்பில் பங்கேற்று வரும் டைகர் ஷெராஃப், ஜன்தர் மந்தர், சிட்டி பேலஸ், பர்கோடா பகுதிகளில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தார். அப்போது ரசிகர்களை பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேட்ரிக்ஸுடன் பாகியை இணைத்த டைகர் ஷெராஃப்

ABOUT THE AUTHOR

...view details