ஹைதராபாத்: ‘ஹம் தில் டி சுக்கே சனம்’ படத்தில் ஐஸ்வர்யா, நந்தினி தர்பார் எனும் குஜராத்தி பெண்ணாக நடித்தது குறித்த கேள்விக்கு சஞ்சய் விளக்கம் அளித்ததை காண்போம்.
இதுகுறித்து சஞ்சய், இதுவரை ஐஸ்வர்யா ராய் போல் யாரும் என்னிடம் கதை கேட்டதில்லை. மிக அக்கறையுடன், மிகக் கூர்மையாக, மிகுந்த கவனத்துடன், மிகுந்த ஈடுபாடோடு கதை கேட்கக்கூடியவர் ஐஸ்வர்யா ராய். ஸ்கிரிப்டில் உள்ளதை அப்படியே உள்வாங்கி நடித்து அசத்தினார். நந்தினி கதாபாத்திரத்துக்கு அவர் உயிர் கொடுத்தார் என்றார்.