பெருந்தொற்றான கரோனாவுக்கு, இது வரை உலகம் முழுவதும் 6 லட்சத்து 38 ஆயிரத்து 146 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், அதில் 30 ஆயிரத்து 105 பேர் உயிரிழந்திருப்பதாகவும் உலக சுகாதர நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தத் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து பாலிவுட் பிக் பி என்று அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன் தனது சமூகவலைதளப்பக்கத்தில், "2020 ஆம் ஆண்டு வைரசுடன் உள்ளது. தயவுசெய்து இந்தாண்டை மீண்டும் புதிய ஆண்டாக மாற்ற முடியுமா? என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் நலம் அடைந்திருந்தாலும், அவரது கழிவுகளில் அந்தக் கிருமி உயிரோடு இருக்கும். அந்தக் கழிவில் ஒரு ஈ உட்கார்ந்துவிட்டு பின் நாம் உண்ணும் உணவில் உட்கார்ந்தால் நோய் இன்னும் தீவிரமாகப் பரவும் என்றும் பதிவிட்டிருந்தார். இது உண்மை இல்லை என சுகாதாரத்துறை இணை அமைச்சர் மறுத்தார். அதே போல் சுய ஊரடங்கின் போது, பிரதமர் மோடி கைதட்டச் சொன்னதன் காரணம், கைதட்டுவதால் ஏற்படும் அதிர்வலைகளில் கரோனாவின் தீவிரத்தைக் குறிக்கும் என்று கூறிய கருத்து, பலரால் விமர்சிக்கப்பட்டதையடுத்து அந்தப் பதிவை நீக்கினார் அமிதாப் பச்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விழித்திருப்போம்...விரட்டியடிப்போம் கரோனா நோயை - பவர் ஸ்டார் சீனிவாசன்